வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (10:57 IST)

பண்ணை வீட்டை லாட்ஜாக்கி பொள்ளாச்சி கும்பல் செய்த வேலை!!! திக்குமுக்காடிய போலீஸ்...

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸார் ஏராளமான ஆணுறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது.
 
இந்நிலையில் அயோக்கியன் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு போலீஸார் சோதனை செய்ய சென்றனர். ஆனால் பண்ணை வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் விடாத போலீஸார் விசாரணைக்கான வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
 
உள்ளே சென்ற போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அங்கு ஏராளமான ஆணுறைகள் இருந்தது. இந்த கேடுகெட்ட கும்பல் பெண்களை மயக்கி இங்கு வரவழைத்து அவர்களை சீரழிப்பதையே முழு நேர வேலையாக வைத்துள்ளனர். பண்ணை வீட்டை ஒரு லாட்ஜ் போல் மாற்றி அட்டூழியம் செய்து வந்துள்ளது இந்த கும்பல்.