செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (11:06 IST)

அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? நடிகை கஸ்தூரி காட்டம்

டிவிட்டரில் தன்னை விமர்சித்து பேசியவர்களை நடிகை கஸ்தூரி பதிலுக்கு கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
 
நடிகை கஸ்தூரி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அப்படி அவர் சில சமயங்களில் சமூகவலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் ஆபத்தாக முடிகின்றன. அப்படி சமீபத்தில் கஸ்தூரி ட்விட்டர்ல மாலை போடுவது எப்படி என்று  அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்  அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பி 'தல' (வலி) செந்தில்குமார்  !  என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
இதனால் கடுப்பான சில அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை கண்டமேனிக்கு அசிங்கமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.
 
இந்நிலையில் கஸ்தூரி சமீபத்தில் செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பற்றி ஒரு டிவீட்டை போட்டார். ஆனாலும் விடாத அஜித் ரசிகர்கள் சிலர் அவரின் இந்த டிவீட்டிற்கு கொச்சையாக ரீடிவீட் செய்தனர்.

 
இதற்கிடையே கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து அசிங்கமா பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் 'தல' பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.