திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:56 IST)

வாய்மட்டும் தான் மத்தபடி ஒன்னுமில்ல: பாமகவை இறங்கியடித்த கஸ்தூரி

கூட்டணி குறித்து இன்னும் எந்த ஒரு தெளிவான முடிவையும் தெரிவிக்காத பாமக வை நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனாலும் பாமக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்றே தெரியவில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் எந்த கட்சி தங்களுக்கு அதிக சீட்டையும், தாங்கள் கேட்கும் தொகுதியையும் கொடுக்கின்றனரோ அவர்களுக்கே தங்களது ஆதரவு என்ற முடிவில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. பாமக தரப்பிலிருந்து கூட்டணி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக  ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம்.
 
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு?என கேள்வி எழுப்பியுள்ளார்.