செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (20:32 IST)

பிரதமர் மோடி குறித்து பேசிய பாக்., அமைச்சருக்கு மின்சார தாக்குதல் ...

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் மோடி குறித்து பேசிக் கொண்டிருந்த அந்நாட்டு அமைச்சர், மீது மின்சாரம் பாய்ந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் பாகிஸ்தானில் பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக்  ரசித், பொதுக்கூட்டத்தில் மக்களிடையே நின்று மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய பிரதமர்  நரேந்திரமோடியின் எண்ணம் எங்களுக்குத் தெரியும் என அவர் கூறி முடித்தபோது, அவரது கையில்  பட்டென ஷாக் அடித்தது.
 
அதனால் கையை உதறினார். பின்னர் இந்தக் கூட்டம் நடைபெறுவதை இந்தியப் பிரதமர் மோடியால் தடுக்க முடியாது என்று தெரிவித்து தனது உரையை முடித்தார். அமைச்சருக்கு அருகில் நின்றிருந்தவர்கள் இதைப் பார்த்து சிரித்தனர். இந்தக்காட்சி வைரலாகிவருகிறது.