வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (12:16 IST)

கருவாடு மீன் ஆகாது! கறந்த பால் மடி புகாது! சசிகலாவை விளாசிய ஆர்.பி.உதயகுமார்.!!

RP Udayakumar
அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்றும் கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
 
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார். மேலும் சசிகலா சுற்றுப்பயணம் என்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று அவர் விமர்சித்தார். அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்றும் சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக 2-ம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலாதான் காரணம் என்று அவர் தெரிவித்தார். 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா என குறிப்பிட்ட உதயகுமார், தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை என்று குற்றம் சாட்டினார்.  

 
சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம் என்றும் அதிமுகவினர் தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர் என்றும் அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்றும் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.