நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்!
"ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரி வேட்டை "அதிமுக மதுரை மாவட்டம்.
என விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி, திருப்பரங்குன்றம், விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் சசிகலாவை வரவேற்று அதிமுக ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா தென்காசியில் இருந்து நாளை முதல் மூன்று நாட்கள் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், இன்று இரவு மதுரை வருகிறார்.
சசிகலா,மதுரை வருவதையொட்டி அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரை, மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.