புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (15:12 IST)

அதிமுக கவுன்சிலர்கள் ரோட்டில் நடக்காதீர்கள், இடைத்தேர்தல் வந்துவிடும்: செல்லூர் ராஜூ

அதிமுக கவுன்சிலர்கள் யாரும் ரோட்டில் நடமாடாதீர்கள் என்றும் அவ்வாறு நடமாடினால் இடைத்தேர்தல் வந்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தபோது ’40 தொகுதிகளில் வெற்றி கொடுத்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு பரிசாக முதலமைச்சர் கொடுத்துள்ளார் என்றும் அதிமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ததற்கு குடும்பத்துடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
 
மதுரையில் நடை பயிற்சி செல்வதற்கு பயமாக இருக்கிறது என்றும் எங்கள் கட்சி கவுன்சிலர்கள் எல்லாம் நடைபயிற்சி போகிறவர் என்றும் நீங்கள் எல்லாம் நடைபயிற்சி போகாதீர்கள் இடைத்தேர்தல் வந்துவிடும் என்றும் அப்புறம் திராவிடம் மாடல்படி நாங்கள் ஜெயிச்சுட்டோம் சொல்லிவிடுவார்கள் என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
 
ஏற்கனவே திமுக அமைச்சர் தா கிருஷ்ணன் நடை பயணம் செய்த போது கொல்லப்பட்டார் என்றும் இன்றுவரை கொலை செய்தது யார் என்பது தெரியாமல் போய்விட்டது என்று கூறிய செல்லூர் ராஜு அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva