தொடர்புடைய செய்திகள்
- கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம்- குருதரிசனம் - 2023 குருபூஜை விருது விழா!
- நன்செய் புகழூர் அழகரசனாருக்கு பாராட்டு நிகழ்வு
- பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்.. கரூர் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!
- பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது...வாகனம் பறிமுதல்!
- லிட்டில் பிளவர் பள்ளியில் விளையாட்டு விழா
கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் - கரூர் - திருச்சி இடையே ரயில் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் - கரூர் - திருச்சி இடையே ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் - திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை இன்று (19.01.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் நாளை கரூரிலேயே நிறுத்தப்படும் எனவும், கரூர் முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுவதாகவும், மறு மார்க்கத்தில் திருச்சிலிருந்து இன்று மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணியளவில் புறப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
