1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (21:45 IST)

கரூர் எஸ்பி மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி கரூர் எஸ்பி ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜசேகரன் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விக்ரமன் என்பவர் கரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சற்றுமுன் உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.
 
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடும் நிலையில் அவரை தோற்கடிக்க அதிமுகவும், அமமுகவும் தீவிர திட்டம் தீட்டியுள்ளன. இந்த நிலையில் எஸ்பி மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்ரமன் இதற்கு முன்னர் டிஜிபி அலுவலகத்தில் கணிணிமயமாக்கல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது