செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி ஹோமம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருண ஹோமம் நடைபெற்றது.

கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதல் தலமாக விளங்குவது கரூர் ஸ்ரீ கல்யாண பசுதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவர்  சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 
 
மேலும் இந்த ஆலயத்தில் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி தயார்கள் காட்சியத்து வருகின்றனர். எந்தாண்டும் இல்லதா அளவிற்க கரூர் மாவட்டத்தில் வெய்யில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. மேலும் உரிய நேரத்தில் மழையில்லாததால் மக்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறானர். அதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசு உத்தரவின் பெயரில் இன்று காலை முதல் வருண ஹோமம் நடைபெற்றது. 
 
ஆலய தலைமை சிவாச்சாரியர் உமாபதி மற்றும் சுந்தரம்பசுபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த யாகம் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து வருணஜெபம், புண்ணியாகம், பஞ்சகவ்யம், கலசபூஜை, ருத்ரசமகாஜம், வருணயாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மஹா பூர்ணாவுதி நடைபெற்றது தீபாரதனை காட்டப்பட்டது. பூஜை செய்யப்பட்ட கலசத்தை ஆலயத்தை சுற்றி  ஊர்வலயமாக கொண்டு சென்று அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். கோயிலின் உட்பிரகாரத்தில் கலசங்களுக்கு., வருண ஜெபம் செய்யப்பட்டு, கோயிலின் உள்ள கிணற்றில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்தறை உதவி ஆணையர் சூர்யநாராயணன் தலைமையில் செய்திருந்தனர்.