வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (10:24 IST)

கரூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை: துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு..!

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித்துறையினர் சோதனை செய்தபோது திமுகவினர் வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் கரூரில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கரூரில் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் சோதனை செய்து வரும் அதிகாரிகளை பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி என்ற நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட இடத்தில் தற்போது வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கரூரில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் மீண்டும் சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran