திடீரென டெல்லி செல்லும் தமிழக ஆளுனர் ரவி.. செந்தில் பாலாஜி விவகாரமா?
தமிழக ஆளுநர் ரவி இன்று திடீரென நான்கு நாள் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்கள் ஆகவே தமிழக அரசிற்கும் தமிழக ஆளுநர்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரின் பரிந்துரையை ஏற்காமல் தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர அரசாணை பிறப்பித்தது என்பதும் இதனால் கவர்னர் கடும் அதிர்ஷ்டியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அவர் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட ஒரு சில முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva