திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:07 IST)

சிறுமியை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கரூரில் சிறுமியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கலைச்செல்வி என்பவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு போதை பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவர் சொல்வதைக் கேட்ட அந்த சிறுமியை திருப்பூருக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த குற்றத்தில் இவருக்கு உறுதுணையாக குமுதவல்லி, கல்பனா ,சந்தனமாரி என்கிற சந்தியா, பிரதாப், சிவகுமார்  மணி ஆகியோர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழ போலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.  இது தொடர்பான, வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதி முதல் குற்றவாளி கலைச்செல்விக்கு இரட்டை ஆயுள்தண்டணை, இரண்டு 10 வருடத் தண்டனை மற்றும் 13 வருடத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி உத்தரவிட்டார். மற்றக் குற்றவாளிகளான குமுதவல்லி, கல்பனா, மணி ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், மேலும் 13 வருடம் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மற்றொரு குற்றவாளி சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். சந்தியா மற்றும் பிரதாப் ஆகியவர்கள் குற்றமற்றவர்கள் என  அவர்களை விடுதலை செய்தார்.