திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (18:06 IST)

30 லட்சம்பேர் பேருந்தில் செல்வதை நிறுத்தி விட்டார்கள் : வீடியோ பாருங்கள்

கரூர் மண்டலத்திற்கு பொதுமேலாளர் என்று ஒருவர் இல்லாத நிலையில், இங்குள்ள கிளைமேலாளர்கள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.

 
கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எதிராக, அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கரூர் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், வாயிற்கூட்டம் நடைபெற்றது. 
 
கரூர் சி.ஐ.டி.யூ கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கரூர் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தொழிலாளர் முன்னேற்ற கழகம் (LPF), சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி (AITUC), ஐ.என்.டி.யூ.சி (INTUC), தேசிய முற்போக்கு திராவிட தொழிலாளர் சங்கம் (DMTK)., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் (TTSF)., உள்ளிட்ட சங்கங்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய, ஏ.ஐ.டி.யூ.சி யின் கரூர் மண்டல தலைவர் ஆர்.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
 
போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியில் உள்ள கரூர் மண்டலத்தில் பொதுமேலாளர் இல்லாமல், இங்குள்ள கிளைமேலாளர்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், உள்ளூரில் (கரூரில்) அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருப்பதினால் அவரை பார்த்து அவருக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு, இங்குள்ள தொழிலாளர்களை கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.
 
குறிப்பாக சட்டத்தை மதிப்பதில்லை. வாரவிடுமுறை என்பது இருக்கும் நிலையில், அந்த வாரவிடுமுறையை விட்டு விட்டு, இஷ்டத்திற்கு வேலை செய்வதாகவும், அவர்களை டிரான்ஸ்பர் செய்வதும், வருவாய் வருவாய் என்று டீசல் சேமிப்பு என்கின்ற பெயரில், கே.எம்.பி.எல் (kmpl)  கேட்டு பொதுமக்களுக்கு முன்பாக, ஒட்டுநர்களை தரக்குறைவாக பேசும், கரூர் 2 கிளை மேலாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
போக்குவரத்து கட்டண உயர்வு, என்பது குறைந்த பட்சம் ஏற்றி இருந்தால் பரவாயில்லை என்றும், அதிகபட்சமாக கட்டண உயர்வினால், வெவ்வேறு வழிகளில் பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொண்டு, 30 லட்சம் பேர் குறைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளன. ஆனால், தொழிற்சங்கத்தையே அதிகாரிகள் மதிக்காமல், தொழிலாளர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர்.
 
தற்போது கூட்டுக்குழு மூலம் தான் நாங்கள் (கூட்டுக்குழு) அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்திக்க இருக்கிறோம். 
 
பேட்டி : ராஜேந்திரன் – ஏ.ஐ.டி.யூ.சி - கரூர் மண்டல தலைவர்
-சி.ஆனந்தகுமார்