1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (08:22 IST)

கருணாஸ் எம்.எல்.ஏ பதவிக்கும் ஆபத்து: டிடிவி தினகரன்

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மட்டுமின்றி கருணாஸ்,  தமிமுன் அன்சாரி ஆகியோர்களின் எம்.எல்.ஏ பதவிக்கும் ஆபத்து என அமமுக பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிய டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் பதவியைத் தக்க வைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும், ஆனால் மே 23ஆம் தேதி மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்றும் கூறிய தினகரன், 'திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருப்பது மூன்று எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை துரிதப்படுத்தவே செய்யும் என்று கூறினார்.
 
மேலும், 'ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தோல்வி பயத்தில் இருப்பதாகவும், காவல்துறை தங்கள் கையில் இருக்கிறது என்பதால், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க முடிவை எடுத்திருப்பதாகவும், மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி  தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் மீது இதே நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் திமுகவின் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் ஓட்டெடுப்புக்கு வரும்போது தினகரன் திமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது