அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

dhanabal
Last Updated: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:58 IST)
கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய இம்மூன்று எம்.எல்.ஏக்களும் அமமுகவில்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) பொறுப்பில் இருப்பதாகவும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும்  புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று சபாநாயகர் 3பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :