புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (20:30 IST)

கருணாஸ் மீண்டும் கைது! இரண்டு புதிய வழக்குகள் பாய்ந்தது

நடிகரும் திருப்புவனம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வரை சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையும் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் அடிப்படையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே ஏற்கனவே அவருக்கு முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு ஒருசில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.