1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (11:52 IST)

கருணாநிதியின் போட்டோ வெளியிடுங்க பாப்போம்?: அதிமுகவினர் பதில் கேள்வி!

கருணாநிதியின் போட்டோ வெளியிடுங்க பாப்போம்?: அதிமுகவினர் பதில் கேள்வி!

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட போது அவரது புகைப்படத்தை வெளியிட அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. இந்நிலையில் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிடுங்களே என அதிமுகவினர் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 
 
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஒரு அசாதரண சூழல் தமிழகத்தில் நிலவியது அப்போது முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வந்தனர்.
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட மறுப்பது ஏன்?. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அவரது வெளியிடுங்கள் என அறிக்கை வெளியிட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தார் திமுக தலைவர் கருணாநிதி.
 
இந்நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அறிக்கை விட்ட கருணாநிதி தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவரது புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என அதிமுகவினர் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.