1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 ஜூன் 2018 (13:40 IST)

தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

தமிழக முதல்வராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த கலைஞர், உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் கலைஞரின் 95 வது பிறந்தநாளான இன்று அவருக்கு பல்வேறு நடிகர் - நடிகைகள், பொதுமக்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோடி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, திருமாவளவன், வைகோ, திருநாவுக்கரசர், கீ.வீரமணி உள்ளிட்ட பலர் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
கலைஞரை நேரில் காண பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், கோபாலபுரத்தில் குவிந்தனர். சற்று நேரத்திற்கு முன் கருணாநிதி தனது வீட்டில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை சந்தித்தார். வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்து புன்னகைத்தார். இதனால் உற்சாகமடைந்த திமுக தொண்டர்களும் கையசைத்து ஆரவாரம் செய்தனர்.