திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 மே 2018 (14:08 IST)

தூத்துக்குடி மக்களை சந்தித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாதிக்கப்பட்ட மக்களை ஆளிங்கட்சியினர் யாரும் சென்று பார்க்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தனர். தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில் தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.
 
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கலவரத்தில் தீய சக்திகள் புகுந்துவிட்டது என்றார். 144 தடையின் போது மக்களுக்கு அத்தியாவச பொருட்களை தடையின்றி அரசு வழங்கியதாகவும் தெரிவித்தார்.