செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (17:41 IST)

கருணாநிதி மறையவில்லை : அவர் நம்மை வழிநடத்துகிறார் - ராகுல்

தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடையே கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். 
இந்நிலையில் தற்போது நாகர் கோவிலில் பெருந்திரளான பொதுமக்களுக்கு மத்தியில் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கிறார். 
 
ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேச அதை தமிழில் பெயர்த்து தங்கபாலு கூறுகிறார்.
 
''இக்கூட்டத்தில் ராகுல் பேசும் போது,தமிழக கவி திருவள்ளுவர் மாதிரி உண்மை வெல்லும், பாதுகாப்புத் துறையில் ரு.32000 கோடி அனில் அம்பானிக்குச் சென்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் பசுமை புரட்சி வரும். இந்தியாவில் உள்ள செல்போன்கள் சீனா தயாரிப்புகளாக உள்ளது. அதை மாற்றி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போது இல்லை ஆனால் அவர் நம்மை வழிநடத்துகிறார். ஜிஎஸ்டி முறை மாற்றி அமைக்கப்படும்''. இவ்வாறு அவர் தெரிவித்தார்.