1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (10:58 IST)

கமல்ஹாசன் கட்சியில் இவ்வளவு பேர் விருப்ப மனுவா ?

வரும் நடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைக்க கமல்ஹாசன் கூட்டணி வைக்க முயன்றாலும், அவரது மக்கள் நீதி மய்யத்தை யாரும் பொருட்டாக நினைக்கவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தார்கள். இதனால் தனித்து விடப்பட்டவராக இருந்தார். இருப்பினும் அவரது முயற்சி சோடை போகவில்லை.
ம.நீ.மை 40 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார் கமல். இந்நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் கட்சி உறுப்பினராக அல்லாதவரும் மனுதாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
 
இதற்கான விருப்ப மனு கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. இரு தினக்களுக்கு முன்பு சென்னை ஆழவார் பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து கமல் விருப்ப மனுக்களை பெற்றார். 
 
ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 7 ஆம் தேதி மாலையுடன் விருப்ப மனுக்கள் பெறுவது முடிவடைந்தது.
 
மநீமை சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 1137 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.