1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (22:33 IST)

திருமாவளவனுக்காக பிரச்சாரம் செய்த கமல்ஹாசனுக்கு நன்றி! கரு.பழனியப்பன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி தினந்தோறும் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றில் அவர் டிவியை உடைக்கும் ஒரு விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விளம்பரத்தில் தேர்தல் ஆணையம் சில கட் செய்ததும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த விளம்பரத்தின் கடைசியில் 'பெற்றோர் சொல்வதை கேட்க வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் எந்த பெற்றோர் என்பதை நான் கூறுகின்றேன், நீட் தேர்வினால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்களை கேட்டு ஓட்டு போடுங்கள் என்று கூறியிருந்தார்.
 
கமல்ஹாசன் இவ்வாறு கூறிய மறுநாளே அனிதாவின் அண்ணன் மணிரத்னம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் திருமாவளவனுக்குத்தான் ஓட்டு போடப்போவதாக கூறியிருந்தார். இதனை குறிப்பிட்ட கரு.பழனியப்பன், கமல்ஹாசனின் வீடியோவால் தான் அனிதாவின் அண்ணன் இவ்வாறு கூறியுள்ளார். இதேபோன்று கமல்ஹாசன் இன்னும் நிறைய வீடியோக்களை வெளியிட்டு திருமாவளவனின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு கமல்ஹாசனுக்கு தனது நன்றிகள் என்றும் கிண்டலாக கூறியுள்ளார். 
 
மேலும் கமல்ஹாசன் மாநில கட்சிகளை மட்டுமே தாக்கி வருவதாகவும் பாஜக குறித்து அவர் விமர்சனமே செய்வதில்லை என்றும் கரு.பழனியப்பன் குறை கூறியுள்ளார்.