வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

"இந்தியன் 2" கைவிரித்த லைக்கா! காரணம் கமல்? ஷங்கர் அதிரடி முடிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது.


 
350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கவிருந்தது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் படத்தின் நாயகன் கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளார். இதனால் படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருப்பதால் அதிருப்தி அடைந்த லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து ஒதுங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 


 
அதனால் தற்போது வேறு தயாரிப்பாளரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ள ஷங்கர், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் அவர்களோ படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே  தயாரிப்பதை பற்றி யோசிப்போம் என்று கூற தற்போது ஷங்கர் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். ஒருவேளை ரிலையன்ஸ் நிறுவனமும் பின்வாங்கினால் இந்தியன்2 முற்றிலுமாக கைவிடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர்..