ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (08:44 IST)

வா தமிழா வா: ஜீ டிவி நிகழ்ச்சியை கலைஞர் டிவிக்கு மாற்றிய கரு பழனியப்பன்..

karu palaniyappan
கடந்த சில ஆண்டுகளாக ஜீ டிவியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. 
 
இது குறித்து கரு பழனியப்பன் தனது சமூக வலைதளத்தில் திராவிட கருத்துக்களை பேச முடியாத தளத்தில்தான் தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை என்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி தற்போது வா தமிழா வா என்ற பெயரில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
ஜூன் 11ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் இரண்டு தலைப்புகளை குறித்து பொதுமக்கள் இரண்டு குழுக்களாக விவாதிப்பார்கள் என்றும் அதில் கரு பழனியப்பன் தனது கருத்தை தெரிவிப்பார் என்றும் தற்போதைய சமூக பிரச்சினைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் அலசப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva