வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (19:18 IST)

சிங்கதுக்கு ஜொரம் வந்தா எலி வாலாட்டும்; யார் சிங்கம்? யார் எலி?

அதிமுகவுடன் பல சிக்கல்களை தாண்டி கூட்டணி அமைத்துள்ளது தேமுதிக. ஆனால், இந்த கூட்டணிக்கு முன்னர் தேமுதிக சில காரணங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 
 
இப்போது தேமுதிகவை சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்தை அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து கார்த்திக் சிதமப்ரம் போட்டுள்ள டிவிட் பின்வருமாறு, 
 
கேப்டனாக இருந்து... சிப்பாயாய் மாறி... சிப்பந்தியாய் மாறி... சின்னாபின்னமானவர் தான்.. நம்ம விஜயகாந்த் என பதிவிட்டுள்ளார். இந்த பதவு எந்த நோக்கத்துடன் போடப்பட்டது என தெரியவில்லை. 
 
ஆனால், இந்த டிவிட்டுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளனர். சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா, சிங்கத்துக்கு ஜொரம் வந்தா எலி வாலாட்டும் என்றும் பல கமெண்ட்கள் விஜயகாந்துக்கு ஆதரவாகவும், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராகவும் குவிந்து வருகின்றன.