வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (21:53 IST)

பிரேமலதா பேசியதை .மறப்போம் மன்னிப்போம்.: ஜெயகுமார்

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை மட்டுமின்றி அதிமுகவையும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடுமையாக விமர்சனம் செய்ததால் இனி அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால் பிரேமலதா உள்பட தேமுதிக நிர்வாகிகள் தம்பிதுரை, தமிழிசை உள்ளிட்டவர்களிடம் கூட்டணியில் இடம் கொடுக்க கெஞ்சியதாகவும், கொடுத்ததை கொடுங்கள் என்று கேட்டதாகவும் இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்து கொள்ள அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இருப்ப்பினும் எத்தனை தொகுதி, எந்த தொகுதி என்ற எந்த டிமாண்டையும் தேமுதிக தரப்பு வைக்கக்கூடாது என்றும், கொடுத்த தொகுதிகளை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது
 
அதேபோல் தேமுதிக சுதாரிப்பாக ராஜ்யசபா தொகுதி எல்லாம் வேண்டாம், மக்களவை தொகுதியே கொடுங்கள் என்றும், தேர்தலுக்கு பின் இரு கட்சிகளின் உறவு எப்படி இருக்கும் என்று தெரியாது என்றும் கூறிவிட்டதாம். எனவே மீண்டும் அதிமுக கூட்டணியில் இணையும் தேமுதிகவுக்கு இரண்டு அல்லது மூன்று மக்களவை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

மீண்டும் தேமுதிக கூட்டணியில் இணைவது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'அவர்களுடைய கட்சியை உயர்த்திப் பிடிப்பதற்கு அவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இதுபோன்ற கருத்துக்கள் கூறுவதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம். இந்த விஷயத்தில், பிரேமலதா சொல்வதை மன்னிப்போம், மறப்போம்” என்று பதிலளித்தார்.