திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (08:44 IST)

முதல்வரை சந்திப்பது மரபு: வெற்றிக்கு பின் நடிகர் கார்த்தி பேட்டி!

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் நடிகர் சங்கத்தை கைப்பற்றியுள்ளது.

 
ஆம், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.  இதே போல துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். 
 
 இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் கார்த்தி. அப்போது அவர் கூறியதாவது, 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் டீம் சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. 
 
மேலும் தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி, ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கு பின்னும் முதலமைச்சரை சந்திப்பது மரபு எனவே விரைவில் முதல்வரை நேரில் சென்று சந்தித்து வருவோம் என தெரிவித்துள்ளார்.