திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (12:06 IST)

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்! – விஷால் அணி தொடர்ந்து முன்னிலை!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விஷால் அணியினர் முன்னனியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும், நாசர் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது.

அதில் நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இதுவரையிலான நிலவரப்படி விஷால், நாசர் அமைத்த பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மொத்தமுள்ள 29 பதவிகளில் பெரும்பான்மை இடங்களில் பாண்டவர் அணி முன்னிலையில் உள்ளது.