திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (16:48 IST)

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’: அட்டகாசமான டீசர்!

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’: அட்டகாசமான டீசர்!
விஷ்ணு விஷால் நடித்த மோகன்தாஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் புரமோஷன் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
 
முதல்கட்டமாக இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அடுத்தடுத்து தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலைகாரன் கேரக்டரில் விஷ்ணுவிஷால் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் திகில் கதையம்சம் கொண்ட படம் என்பதும் டீசர் இருந்து தெரியவருகிறது 
 
விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் எப்.ஐ.ஆர். படத்தை அடுத்து இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது