1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:37 IST)

15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும்… விஷாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்றுள்ள கடனுக்காக 15 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீரமே வாகை சூடும் படத்தின் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது என லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. விஷால் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடி ரூபாய்க் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அதற்காக லைகா நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க விஷால் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது வரை நடித்துக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று விசாரித்த நிலையில் படத்துக்கு எதிராக எந்த தடையும் விதிக்க முடியாது எனக் கூறி விஷால் தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் 3 வாரங்களுக்குள் 15 கோடியை டெபாசிட் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.