செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:26 IST)

காமராஜர் நினைவிடத்துக்கு ராகுல் & சோனியா காந்தி வந்ததே இல்லை – கராத்தே தியாகராஜன் பேச்சு!

கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.

ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்ததால் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேடையில் பேசிய அவர் ‘காங்கிரஸ் கட்சி இப்போது செயல்படுவதே இல்லை. அங்கே பேரம் பேசி தொகுதிகள் வாங்கப்படுகின்றன. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வந்து மரியாதை செலுத்தியதே இல்லை. அவ்வளவுதான் அவர்கள் காமராசருக்கு தரும் மரியாதை.’ எனக் கூறியுள்ளார்.