1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karate Thiagarajan joins BJP!

ரஜினி ஆதரவாளர்....கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார் !

பாஜக
கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி துவங்க போவதில்லை என தெரிந்ததும் தற்போது பாஜகவில் இணைய உள்ளதாகத்தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் எல்.முருகன்  முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

ரஜினியின் நெருங்கிய நண்பரும் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைய ஆர்வம் காட்டியவருமான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி துவங்க போவதில்லை என தெரிந்ததும் தற்போது பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காராத்தே தியாகராஜன் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், பாஜகவில் இணையவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல் வெளியான நிலையில் இன்று, சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்