1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (17:24 IST)

பெப்சிக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியளித்த தயாரிப்பாளர்: குவியும் பாராட்டு!

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெப்ஸி யூனியன் தொழிலாளர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளார் 
 
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும், இதனால் பெப்சி தொழிலாளர்கள் வருமானமின்றி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பெப்சி யூனியன் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதி அளிப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் இந்த நிதியை லைக்காவின் நிர்வாகிகள் ஆர்கே செல்வமணி யுடன் அளித்தனர்.இதனை அடுத்து தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
ஏற்கனவே தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் ரூபாய் 2 கோடிக்கான காசோலையை சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.