செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2023 (12:39 IST)

சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரி - மகாராஷ்டிரா சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Train
சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் பன்மல் என்ற பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் டிசம்ப,ர் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: 
 
நாகர்கோவில் சந்திப்பு - பன்வெல் (வண்டி எண்: 06075) சிறப்பு கட்டண ரெயில் செவ்வாய்க்கிழமைகளான வருகிற 28-ந்தேதி, டிசம்பர் 5, 12, 19, 26-ந்தேதிகள், ஜனவரி 2, 9, 16-ந்தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு பன்வெல் ரெயில் நிலையத்தை வந்து அடையும். 
 
இதேபோன்று மறுமார்க்கத்தில், பன்வெல் - நாகர்கோவில் சந்திப்பு (06076) சிறப்பு கட்டண ரெயில் புதன்கிழமைகளான வருகிற 29-ந்தேதி, டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகள், 2024-ம் ஆண்டு ஜனவரி 3, 10, 17-ந்தேதிகளில் பன்வெல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த அடுத்த வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Siva