திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (13:50 IST)

நெல்லை கண்ணனின் பேச்சு கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே...சீமான்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லைகண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்ய வேண்டும் என தூண்டியதை கண்டித்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமையில் தமிழக கூடுதல் இயக்குனரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல்லைக் கண்ணனின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே என தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக நெல்லை கண்ணன் இஸ்லாம் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் நெல்லை கண்ணன் இவ்வாறு பேசியதை ஒருவர் கூட கண்டிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர் சீமான், இன்று தனது  டுவிட்டர்  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே! 
 
நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!