திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (17:21 IST)

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000  ரூபாய் சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த உயர்வு இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து  வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
 
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். 
 
இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran