புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (11:52 IST)

அதிமுக ஹெல்ப் இல்லாம இது நடந்திருக்காது! – கிசான் முறைகேடு குறித்து கனிமொழி

அதிமுக ஹெல்ப் இல்லாம இது நடந்திருக்காது! – கிசான் முறைகேடு குறித்து கனிமொழி
பிரதம மந்திரியின் கிசான் நிதி முறைகேடில் அதிமுகவின் உதவி இல்லாமல் இருக்க முடியாது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதம மந்திரி கிசான் நிதியில் தமிழகத்தில் முறைகேடாக பலர் விண்ணப்பித்து பணம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்துள்ள எம்.பி கனிமொழி “பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் மூலம் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடு சம்பவங்கள் அனைத்தும் பொதுமுடக்க காலத்திற்குள்ளாக நடந்துள்ளன. வங்களில் கடன் பெற உதவுவதாக தமிழக பாஜக இணையதளம் தொடங்கியது இதற்குதானா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இந்த மோசடியில் 5 லட்சம் பயனாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள கனிமொழி ஆளும் அதிமுக அரசின் உதவி இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க முடியாது என குற்றம் சாட்டியுள்ளார்.