வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (09:54 IST)

காஞ்சிபுரம் பள்ளியின் குடிநீர் தொட்டி இடிப்பு.. காக்கா தான் காரணம் என கலெக்டர் தகவல்..!

காஞ்சிபுரம் அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த தண்ணீர் தொட்டி இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆட்சியரின் உத்தரவின்படி ஜேசிபி எந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் அந்த  தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என்றும் அழகிய முட்டையை காக்கா போட்டதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ்.பி. சுதாகர் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் இருவரும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றச்சாட்டை மறுத்த ஆட்சியர், குடிநீர் தொட்டியில் முட்டை கூடு கிடந்ததாகவும், அழுகிய முட்டையை காகம் போன்ற பறவைகளை போட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.  


Edited by Siva