டெலிவரி நிறுவன ஆட்களை கண்காணிக்க விதிகள்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
டெலிவரி நிறுவன ஆட்களை கண்காணிக்க புதிய விதிமுறைகள் வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவு, மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெலிவரி நிறுவன ஆட்களைப் போல வீடுகளுக்கு சென்று குற்றச்செயலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு நபர், டெலிவரி நிறுவன ஊழியர் போல் சென்று கொலை செய்ய சம்பவத்தை சுட்டிக்காட்டி இது குறித்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, டெலிவரி நிறுவன ஊழியர்கள் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து டெலிவரி நிறுவன ஆட்களுக்கு புதிய விதிகளை டிஜிபி வகுக்க வேண்டும் என்றும் இது குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை நான்கு வாரங்களில் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Edited by Mahendran