வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (15:09 IST)

கிளி ஜோசியம் பாத்தாதானே புடிப்பீங்க! செம ட்ரிக்காய் எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்!

Eli Josiyam

தமிழ்நாட்டில் பச்சைக்கிளிகளை வளர்க்க தடை உள்ளதால் பச்சைக்கிளி ஜோசியம் பாதிப்படைந்துள்ள நிலையில் புதுவிதமான ஜோசியங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிளி ஜோசியம் என்பது பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தெருக்கள்தோறும் வரும் கிளி ஜோசியர்கள் கூண்டில் வைத்திருக்கும் கிளியை பார்ப்பதற்காகவே பலர் கூடுவதும் உண்டு. ஆனால் பச்சைக்கிளிகள் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பறவைகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால், கிளிகளை இவ்வாறு கூண்டி அடைத்து ஜோசியம் பார்ப்பது, வீட்டில் வைத்து வளர்ப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

 

இதனால் கிளி ஜோசியர்கள் அவ்வபோது வனத்துறையினரிடம் பிடிபடும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளது. இதனால் கிளி ஜோசியர்கள் கிளிக்கு பதிலாக வேறு விலங்குகள், பறவைகளை பயன்படுத்துவது குறித்த முயற்சிகளில் உள்ளனர்.

 

அந்த வகையில் ஆணைப்பட்டியை சேர்ந்த ஜோசியர் ஒருவர் வளர்ப்பு எலியை பழக்கி எலி ஜோசியம் ஒன்றை தொடங்கி ட்ரெண்டாகியுள்ளார். ஆணைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் முன்பு கிளி ஜோசியம் பார்த்து வந்தவர் முருகேசன். தற்போது கிளிக்கு பதிலாக வளர்ப்பு எலியை பழக்கி அதன் மூலம் அவர் ஜோசியம் பார்த்து வருகிறார்.

 

கிளியை போலவே எலியும் அழகாக சீட்டு எடுத்துக் கொடுக்கும் காட்சியை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K