கமல்ஹாசன் படத்தின் ஏன் நடிக்கவில்லை ...ராகவா லாரன்ஸ் விளக்கம்

rajini lawrance
Sinoj| Last Updated: திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:46 IST)

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகர் லாரன்ஸ்
நடிப்பதாக இருந்தநிலையில் அவர் விலகினார். இதுகுறித்த தகவல் வெளியாகிறது.தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

vikram

இந்நிலையில், கமலின் 232 வது படத்தில்
பகத் பாசிலுக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால் ருத்ரன் படத்தில் லாரன்ஸ் பிஸியாக இருப்பதாலும் சந்திரமுகி-2 படத்தில் பணிகள் இருப்பதாலும் விக்ரம் படத்தில் அவர் நடிக்கவில்லை என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :