புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (11:52 IST)

மார்க் எடுக்குறது மட்டுமே வாழ்க்கை இல்ல.. ப்ரீயா விடுங்க! – கமல்ஹாசன் ட்வீட்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. காலை 9.30 மணி முதல் ரிசல்ட் பார்க்க வலைதளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பலர் தங்களது தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையாமலும் உள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.