திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (08:40 IST)

இப்படியே போனால் நோட்டாவை கூட தாண்ட முடியாது! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பினால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இன்னமும் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பாட சுமையை குறைக்கும் பொருட்டு சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட பாடங்கள் முக்கியமாக தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்ததாய் உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் “இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற CBSC பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் Nota வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்!” என்று கூறியுள்ளார்.