1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhassan Demand Assembly live for people information

சட்டமன்ற விவாதத்தை லைவாக ஒளிபரப்ப வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!

Tamilnadu
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் காணும்படி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுவது மற்றும் விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் குறித்து கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும்! – மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!