திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (12:04 IST)

போலி உண்ணாவிரதம் ; எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் போலியானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் நேற்று மாலை ரயில் மூலம் சென்னையிலிருந்து திருச்சி கிளம்பி சென்றார்.
 
இந்நிலையில், இன்று காலை திருச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் “நீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என காத்திருந்தோம். ஆனால், அதை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசு போலியான உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளது. அதில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்க்கும் அரசாக இது செயல்படுகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.
 
மேலும், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.