புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 மார்ச் 2018 (11:13 IST)

காவிரி விவகாரம் - திமுக நிறைவேற்றிய 7 தீர்மானங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், எதிர்கட்சியான திமுக எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து திமுக செயற்குழு இன்று காலை கூடியது. முடிவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளுன் இணைந்து செயல்படுவது, நியூட்ரினோ திட்ட அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்பது உட்பட மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.