2021 ல் ஆட்சி நமது கையில்..! – கமல்ஹாசன் கடிதம்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றைதையொட்டி தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதில் அவர் ”நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் நிற்கின்றோம். கட்சி தொடங்கியபோது இருந்தே அதே உத்வேகத்துடன் நாம் செயல்பட காரணமாய் இருப்பது நாம் களம் கண்ட முதல் தேர்தலில் நமக்கு வாக்களித்த 17 லட்சம் மக்கள். நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது” என்று கூறியுள்ளார்.
மேலும் கட்சி மற்றும் நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட கமல்ஹாசன், ஓய்வின்றி உழைத்தால் 2021ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும், நாளை நமதே! என கூறியுள்ளார்.