திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2020 (10:50 IST)

கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது... இந்தியன் 2 விபத்து குறித்து சிம்பு பதிவு!

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்தனர். இதில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன்.  இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர் . கமல் ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், தனுஷ், ஜஸ்டின் பிரபகரன், அனுப் ஜலோட்டா என திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் 2 விபத்து குறித்து கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது என கூறி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.