வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (13:36 IST)

கமல் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் – கலாய்த்த செல்லூர் ராஜு !

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அதற்குப் பதிலளிக்கும் போது கமல்ஹாசன் குறித்து ‘கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். நிஜத்தில் அவர் முதல்வர் ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். சினிமாவில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டும்தான். 1967ல் புரட்சித் தலைவர் குண்டடிபட்ட வால்போஸ்டர் தான் அப்போது திமுக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால் கமலை வெறும் நடிகராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். முழு நேர அரசியலில் இருப்பேன் என்று சொல்லிவிட்டு தற்போது மீண்டும் சினிமாவுக்கே சென்றுவிட்டார். அவரது மக்கள் செல்வாக்குக் கடந்த மக்களவைத் தேர்தலிலேயே தெரிந்துவிட்டது’ எனக் கூறினார்.